Skip to main content

Saravanan Meenatchi Serial 01/03/2018 || Episode - 1644

சரவணன் மீனாட்சி பகுதி - 1644


சரவணன் மீனாட்சியில் இன்று சங்கரபாண்டி மீனாட்சியிடம் மன்னிப்பு கேட்பதற்காக போக, மீனாட்சி அறையில் இருந்து வெளியே வரும் இலட்சுமி சங்கரபாண்டியை மீனாட்சியை பார்க்கவிடாமல் தடுத்து அவ இருக்காளா செத்துட்டாளானு பார்க்க வந்தியா என கேட்க, தவறுதல நடந்த விஷயத்துக்கு மன்னிப்பு கேட்கதான் வந்தேன் நான் இப்ப மீனாட்சிய பார்க்க முடியுமா முடியாதா சங்கரபாண்டி கேட்க, என் பொண்ண வேனும்னா நீ தெரியாம அடிச்சிருக்கலாம் ஆனா நீ என் மாப்பிள்ளைய தெரிஞ்சேதான் அடிச்ச ஒரு போட்டியில தோத்தத சாதாரண எடுத்தக்காம கோவத்துல என் மாப்பிள்ளைய அடிக்கப்போனியே இது எவ்வளவு பெரிய கோழைத்தனம் தெரியுமா என இலட்சுமி கேட்க, எங்க குடும்பம் சந்தோஷமா இருக்கக்கூடாதுன்றதுதான உங்க எண்ணம் நீங்க காலடி எடுத்துவச்ச நாள்ல இருந்து அடுக்கடுக்கான பிரச்சனையும் மனஸ்தாபமும் வந்ததுதான் மிச்சம் என சொல்ல நான் அதுக்காக ஒன்னும் வரல என் பொண்ணுக்காகத்தான் வந்தேன் ஆனா நான் வந்த நேரம் நீங்க உங்களுக்குள்ளே அடிச்சிக்கிட்டா நான் என்ன பண்ணுவேன் என இலட்சுமி கேட்க, நீங்க யாரு எப்படிபட்ட ஆளுன்னு எங்களுக்கு எல்லாம் தெரியும்,இதெல்லாம் தெரிஞ்சிதான் உங்கள உள்ள விட்டோம் ஆனா கமுக்கமா இருந்து எம்புட்டு காரியம் பண்ணிப்புட்டிங்க என்கிறான் சங்கரபாண்டி
மீனாட்சிய பார்த்து என்னோட நிலைமைய எடுத்து சொல்லி மன்னிப்பு கேட்கனும் என சங்கரபாண்டி மறுபடியும் கேட்க, நீ பண்ணது தப்புன்னு உனக்கே தெரியுது அது தெரிஞ்சுமா மீனாட்சிகிட்ட மன்னிப்புகேட்க வந்திருக்க, சரி இதே மாதிரி உன் பொண்டாட்டி மண்டைய என் மாப்பிள்ளை உடைச்சிட்டு மன்னிப்பு கேட்க போனா அவ ஒத்துப்பாளா, அதே மனநிலையிலதான என் பொண்ணும் இருப்பா
மீனாட்சி அவ அடிவாங்கனத மறந்து அத சாதாரணமா எடுத்துக்கிட்டாலும் அவ புருஷன அடிக்கிறதுக்கு நீ கம்ப ஓங்கனையே அதை மட்டும் ஜென்மத்துக்கும் மறக்கமாட்டா நான் கேட்ட கேள்வியெல்லாம் சாதாரண கேள்விதான் ஆனா மீனாட்சி முழுசா குணமாகி பழைய மாதிரி திரும்பி வந்து நாக்க புடுங்கிக்கிற மாதிரி மொத்தமா கேள்விகேட்பா எல்லாத்துக்கும் சேர்த்துவச்சி மொத்தமா பீல் பண்ணிக்கோ மறுபடியும் மீனாட்சிகிட்ட மன்னிப்பு கேட்கறன்னு இந்த பக்கம் வந்துறாதா என் மாப்பிள்ளைக்கு தெரிஞ்சா பெரிய பிரச்சனையாயிடும் என சங்கரபாண்டியை மிரட்டி அனுப்புகிறார் இலட்சுமி

அடுத்து மீனாட்சி குடிப்பதற்காக டேபிள் மீது இருக்கும் தண்ணீரை எடுக்க முயற்சி செய்யும்போது டம்ளர் கீழே விழ, அந்த சத்தம்கேட்டு என்னவோ ஏதோ என பயந்து சரவணன் அங்கே ஓடி வருகிறான்
கூப்பிட்டு இருந்தா நான் வந்திருக்க மாட்டேனா என மீனாட்சிக்கு தண்ணீர் ஊற்றி கொடுக்கும் சரவணன் எதுக்கு நீ இப்படி சிரமப்படற டாக்டர்தான் உன்ன ரெஷ்ட் எடுக்கச்சொல்லியிருக்காரு இல்ல உனக்கு எதாவது ஒன்னுனா என்ன கூப்பிடு என்கிறான்
மீனாட்சி சரவணனிடம் நான் ஹாஸ்பிட்டல்ல இருக்கும்போது சங்கரபாண்டி மாமாகிட்ட மன்னிப்பு கேட்க சொன்னனே கேட்டியா, தப்பு நம்ம மேல நாமதான மன்னிப்பு கேட்கனும், சங்கரபாண்டி மாமா என்ன அடிச்சிட்டேன்ற குற்ற உணர்ச்சியால யார்கிட்டயும் கேட்காம ஒதுங்கியே இருக்காரு, அவருக்கு ஏற்பட்ட வலியையும் வருத்தத்தையும் நாமதான் போக்கனும், தப்ப நம்ம மேல வச்சிக்கிட்டு அவர தப்பு பண்ண மாதிரி தவிக்க விடறது தப்பில்லையா உடனே அவர்கிட்ட பேசி அவர்மேல எந்த தப்பும் இல்லனு புரியவை உன்னால நடந்த தப்புக்கு அவர்கிட்ட மன்னிப்புகேட்டு இதை சரிபண்றதுதான் ஒரே வழி உடனே உங்கண்ணகிட்ட போய் பேசு என மீனாட்சி சொல்ல சரவணனும் உடனே போய் பேசறேன் என கிளம்ப
மீனாட்சி சரவணனை கூப்பிட்டு என்ன பழைய மீனாட்சியா மாத்து என பொட்டுவச்சி கம்மல் போட்டுவிடச்சொல்ல சரவணன் மீனாட்சிக்கு பொட்டு வச்சி கம்மல் போட்டு விடுகிறான், பின் இருவரும் சந்தோஷமாக செல்பி எடுத்துக்கொள்கிறார்கள்

அடுத்து சரவணன் சங்கரபாண்டியிடம் மன்னிப்பு கேட்பதற்காக சங்கரபாண்டியோட ரூமிற்கு போக அப்போது அங்கே வரும் பழனியம்மாளும் முத்தழகும் சரவணனை தடுக்கிறார்கள், ஊருக்கு முன்னாடி அசிங்கப்படுத்துனது போதாதுனு இப்ப இங்கயும் அசிங்கப்படுத்த பார்க்கிறியா என பழனியம்மாள் கேட்க அப்படியெல்லாம் இல்ல நடந்த தப்புக்கு மன்னிப்பு கேட்கத்தான் என சரவணன் சொல்ல நீ செஞ்சது தப்புதான்னு உனக்கு இப்பதான் புரியுதா இதெல்லாம் உங்க அண்ணன போலிஷ்ல புடிச்சி கொடுக்கறதுக்கு முன்னாடி உனக்கு தோனியிருக்கனும் என பழனியம்மாள் சொல்ல, அதைக்கேட்டு அதிர்ச்சியாகும் சரவணன் என் அண்ணன போலிஷ் புடிச்சிட்டு போனாங்களா என கேட்க, ஒன்னு தெரியாத மாதிரி நடிக்கற உன் பொண்டாட்டிய தெரியாத்தனமா அடிச்சிட்டாரு அதுக்காக நீ, உன் மாமியாரு, அவங்க அண்ணன்னு மொத்தமா பிளான் பண்ணி அவர போலிஷ்ல மாட்டிவிட்டுட்டிங்க இல்ல உம்மேல அவரு எவ்வளவு நம்பிக்கை வச்சிருந்தாரு அவர போய் போலிஷ்ல மாட்டிவிட எப்படிதான் மனசு வந்துச்சோ, செஞ்ச தப்புக்கு மீனாட்சிகிட்ட மன்னிப்பு கேட்கறதுக்காக ஹாஸ்பிட்டலுக்கு வந்த ஆளா நடுரோட்ல வச்சி அரஸ் பண்ணியிருக்கிங்க, இவ்வளவு நாள் எங்க மேல இருந்த பகைக்கெல்லாம் மொத்தமா சேத்துவச்சி பழி வாங்கிட்டிங்க இல்ல என திட்டுகிறாள் முத்தழகு
 எங்கண்ணன போலிஷ் பிடிச்சிட்டு போன விசயம் மட்டும் எனக்கு தெரிஞ்சிருந்தா முதல் ஆளா போய் காப்பாத்தியிருப்பேன், நீங்க என்ன சொன்னாலும் சரி எனக்கு எங்கண்ணன போலிஷ் பிடிச்சிட்டு போன விசயம் தெரியாது இதுக்கு முன்னாடி முட்டாள்தனமா பண்ண விசயத்த ஏதோ தெரிஞ்சி பண்ண மாதிரி பேசிட்டு இருக்கிங்க சரவணன் சொல்ல
நீஸதெரிஞ்சி பண்ணயோ தெரியாம பண்ணயோ எங்கள பொறுத்த வரைக்கும் நீ பண்ணது தப்பு, கூடவே இருந்து குழி பறிச்ச உனக்கு ஆயுசுக்கும் மன்னிப்பே கிடையாது உனக்கு முக்கியம் உன் பொண்டாட்டி உன் மாமியார்தான அவங்களையே கட்டிட்டு அழு, இனிமே மன்னிப்பு கேட்கற, மண்ணாங்கட்டி கேட்கறேன்னு இந்த பக்கம் வந்த மரியாதை கெட்டுரும்னு திட்டிவிட்டு அங்கிருந்து போகிறாள் முத்தழகு

அடுத்து சரவணன் சங்கரபாண்டியை தனியாக சந்தித்து உன்ன போலிஷ் பிடிச்சிட்டு போன விஷயம் எனக்கு தெரியாது, நான் போய் உன்மேல கம்ப்ளைன்ட் குடுப்பேனா, நான் அப்படி எதுவும் பண்ணல என்ன நம்பு இப்பக்கூட செஞ்ச தப்புக்கு உன் கால்ல விழுந்து மன்னிப்பு கேட்கனும்னு உன் ரூமுக்கு வந்தேன் அப்பதான் முத்தழகும், அத்தையும் சொன்னாங்க, நான் உன்ன சீண்டி பார்க்கிறவன்தா ஆனா கஷ்டப்படுத்தி பார்க்கறவன் இல்ல

நீ மீனாட்சிய அடிச்சிட்டேன்னு நினைச்சி வருத்தப்படதா இதைக்கூட நான் சொல்லல மீனாட்சிதான் சொல்ல சொன்னா சங்கரபாண்டி மாமா இதை நினைச்சி வருத்தப்பட்டுட்டு இருக்கு இது தெரியாம நடந்த ஒரு விஷயம்தான் இதை நினைச்சி வருத்தப்பட வேணாம்னு சொல்லச்சொன்னா தயவுசெஞ்சி எப்பவும் போல என்கிட்ட பேசுனே ஆனா ஒரு விஷயம் நான் உன்ன போலிஷ்ல புடிச்சி குடுக்கலன்றத மட்டும் நம்புனே சரவணன் கெஞ்ச
என் தம்பி அப்படி செஞ்சிருக்க மாட்டான்னு நான் நம்புறேன்டா என சரவணனை கட்டிப்பிடித்து கொள்கிறான் சரவணன்
நான் உன்ன தப்பா நினைப்பன்னு நீ எப்படிடா நினைச்ச, ஒரு சில விஷயத்துல நீ கோபம் வர்ற மாதிரிதான் நடந்துக்கிட்ட ஆனா என்ன போலிஷ்ல பிடிச்சி கொடுத்ததுக்கும் உனக்கும் எந்த சம்பந்தமும் இல்லன்னு எனக்கு தெரியும், எல்லாமே உனக்கு தெரியாம உன் மாமியாரும் அவ அண்ணனும் செஞ்ச வேலை, இதை புரிஞ்சிக்காத அளவுக்கு நான் முட்டாள் இல்ல என்கிறான் சங்கரபாண்டி

எல்லாமே நல்லாதான் போயிட்டுருந்துச்சி எப்ப என் மாமியார் வீட்ல காலடி எடுத்து வச்சாங்கலோ அப்ப ஆரம்பிச்சது எல்லா பிரச்சனையும், அவங்க திருந்திட்டாங்கன்னு மீனாட்சி சொன்னதால நம்பிட்டேன்  என சரவணன் சொல்ல, உன் மாமியார் மட்டும் இல்ல வீட்ல இருந்த பணத்த எடுத்துட்டாங்கன்னு தெரிஞ்சும் என் மாமியார வீட்லயே வச்சிருந்தேன் பாரு அதுதான் நான் பண்ணஸபெரிய தப்பு, ஒன்னுமே இல்லாத விஷயத்தக்கூட ஊதி ஊதி எல்லாத்தையும் பெருசாக்கி விட்டுருச்சி என்கிறான் சங்கரபாண்டி

அன்னக்கி மரம் ஏறற போட்டியில கூட தண்ணியில மிளகாய் பொடிய கலந்து என்ன மாட்டிவிட்டது நம்ம அத்தைதான்
அதே மாதிரி கயிறு இழுக்கிற போட்டியிலயும் ஏ அத்த ஏதேதோ சொல்லி நம்ம அம்மாவ ஏ கையாலேயே விழ வச்சிடுச்சி,

என்னாலதான் எல்லா பிரச்சனையும்னு ஒரு நடிப்ப போட்டு அன்னக்கி கோவில்ல இருந்து எங்கத்த கிளம்பிப்போச்சி இல்ல அன்னக்கி அப்பா போய் எப்படி கெஞ்சுனாறு தெரியுமா அதெல்லாம் இப்ப நினைச்சா எனக்கு வெறியாகுது என்கிறான் சரவணன்

நம்ம பலமே நம்ம குடும்பம்தான், எவ்வளவு பிரச்சனை வந்தாலும் நாம ஒத்துமையா இருக்கனும், அந்த ஒத்துமையதான் அவங்க கலைக்க பார்க்கறாங்க என்கிறான் சங்கரபாண்டி

எவ்வளவு பிரச்சனை வந்தாலும் அசராத உன்னையே கோபப்பட வச்சிட்டாங்க ஏ அத்தைக்காவது பிறவிகுணமே அப்படிதான்னு சொல்லலாம் நல்லா இருந்த நம்ம பழனி அத்தைக்கு என்னாச்சி, மாமியாருன்ற போஸ்டிங் வந்தாவே இப்படி ஆயிடறாங்க என சரவணன் சொல்ல

இப்ப நல்லவங்க யாரு கெட்டவங்க யாருன்னு ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்க முடியாது நம ஒன்னுகூடி  ஒரு முடிவெடுத்தாகனும் என சங்கரபாண்டி சொல்ல சரவணன் என்ன பண்ணலாம் என கேட்கிறான்

இவ்வளவுக்கும் காரணம் நம்ம ரெண்டு பேரோட மாமியாருங்கதான் முதல்ல எதாவது செஞ்சி இவங்க ரெண்டு பேரையும் வீட்ட விட்டு வெளியேத்திடனும்  அப்பதான் எல்லா பிரச்சனைக்கும் ஒரு முடிவு வரும் இல்லன்னா நம்ம ரெண்டு பேருக்கு இடையில மண்டைய உடைக்க விட்டுருவாங்க என சங்கரபாண்டி சொல்ல

நாம அவங்கள வெளிய துரத்தக்கூடாது நாம படுத்துற பாட்டுல அவங்க ரெண்டு பேரும் நம்ம வீடு இருக்கிற திசைய மறந்து ஓடனும் என சரவணன் சொல்ல அப்படி என்ன பண்ணப்போற என சங்கரபாண்டி கேட்க

தெரியலன்னே இனிமேதான் யோசிக்கனும் ஆனா வெய்ட்டா யோசிக்கனும் என சரவணன் சொல்வதோடு இப்பகுதி முடிகிறது.

Comments

Popular posts from this blog

ஷிரிதேவியின் வாழ்க்கையை சீரழித்தவன் யார் தெரியுமா ?

இந்த தலைப்பை பார்த்தவுடன் ஆர்வமாக இந்த கட்டுரையை படிப்பீர்கள், ஆனால் இந்த கட்டுரையின் முடிவில் நடிகை ஷிரிதேவியின் வாழ்க்கையை சீரழித்தது யார் என்று உங்களுக்கு தெரிந்துவிடும் ஒரு காலத்தில் உச்சத்தில் இருந்த ஒரு நடிகை, எல்லோர் மனதிலும் நீங்காத இடம்பிடித்த ஒரு நடிகை ஷிரிதேவி, அவர் மாரடைப்பால் மரணித்துவிட்டார் என்ற செய்தியை கேள்விபட்ட எல்லோருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது மாரடைப்பால் மரணம் என்று முதலில் செய்தி வந்தாலும் வந்தது, அவர் உதடு மற்றும் மார்பக மாற்றத்திற்கு செய்துகொண்ட அறுவை சிகிச்சையினால்தான் அவருக்கு மாரடைப்பு வந்தது என கதைகட்ட ஆரம்பித்தார்கள், சிலர் அதைவிட ஒரு படி மேலே போய் ஷிரிதேவி மரணத்தில் மர்மம் அவர் விஷம் கொடுத்து கொள்ளப்பட்டார்  என மேலும் கதைகட்ட ஆரம்பித்தார்கள் ஆனால் இந்த செய்திகளையெல்லாம் பொய்யாக்கும் விதமாக சமிபத்தில் வெளியான செய்தி ஷிரிதேவி மரணத்தில் உள்ள மர்மத்தை விலக்கியுள்ளது ஆனால் அதே செய்தி ஷிரிதேவியின் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது அவரது மரணத்திற்கு பின் வெளியான போஷ்ர்மார்டம் ரிப்போர்டில் அவரது மரணம் எதிர்பாராத விபத்தினால் ஏற்பட்டத...

Saravanan Meenatchi 26/02/2018 || Episode - 1641

சரவணன் மீனாட்சி பகுதி - 1641                                             மருத்துவமனையில் நினைவில்லாமல் இருக்கும்  மீனாட்சியிடம் கண் முழிச்சி என்ன பாரு என அழுகிறான் சரவணன் என் வாழ்க்கைய அர்த்தமுள்ளதா மாத்தினது நீ எனக்கு அந்த கடவுள் கொடுத்த வரம் நீ, எனக்கு சந்தோஷத்த மட்டுமே அள்ளி கொடுத்த தேவதை, எனக்கு கிடைச்ச பொக்கிஷம் நீ, எந்த எதிர்பார்ப்பும் இல்லாம எனக்காக நீ எவ்வளவோ பண்ணியிருக்க, அதுக்கெல்லாம் பதிலுக்கு நான் என்ன பண்ண போறேன்னே தெரியல, நான் என்ன பண்ணாலும் நீ செஞ்சதுக்கு ஈடாகாது, உன்ன எப்படி எப்படியோ பார்த்துக்கனும்னு என் மனசுல ஆசை வச்சிருக்கேன் மீனாட்சி அது எல்லாத்தையும் உனக்காக பண்ணனும் உன்ன அப்படியே உள்ளங்கையிலேயே வச்சி தங்கமா தாங்கனும், ஊர்ல இருக்கிற எல்லா கணவன் மனைவியும் பார்த்து ஆச்சர்யப்படற அளவுக்கு நாம வாழனும், நீ ஆசைப்பட்ட அளவுக்கு நிறைய குழந்தைகள பெத்துக்கனும், நாம ரெண்டு பேர் மட்டும் மறுபடியும் ஹனிமூன் போகனும் என்ன விட்டு போயிட மாட்டியே வா மீனாட்சி எழுந்து...