Skip to main content

Saravanan Meenatchi Serial 02/03/2018 Episode - 1645

சரவணன் மீனாட்சி பகுதி - 1645


கதைச்சுருக்கம் ;-

மீனாட்சி எல்லோருடனும் ஹாலில் உட்கார்ந்திருக்க சரவணன் மீனாட்சிக்கு டேப்லெட் கொடுக்கிறான், வேலுச்சாமி மீனாட்சியை ரூமிற்கு ரெஸ்ட் எடுக்கச்சொல்ல மீனாட்சி ஹாஸ்பிட்டல்ல படுத்திட்டேதான இருந்தேன் ஆனா இப்ப உங்க கூட பேசிட்டு இருக்கறது நல்லா இருக்கு என்கிறாள், ராஜி வலியை பற்றி கேட்க மீனாட்சி வலி கொஞ்சமாதான் இருக்குன்னு சொல்ல, உடனே பழனியம்மாள அடி ஒண்ணும் பலமா படல ஹாஸ்பிட்டல்ல காச பூடுங்கனும்னே கட்ட பலமா போட்டுவிட்டுடாங்க என சொல்ல உனக்கு புடிக்கலானா வாயமூடிட்டு இரு இல்லாட்டி ஒரு ஓரமா போய் உட்காரு, மீனாட்சிக்கு முன்னாடி உட்கார்ந்துட்டு இப்படி சங்கடபடுத்திட்டு இருக்க என திட்டுகிறார்

உடனே பழனியம்மாளும் முத்தழுகும் இந்த வீட்ல இருக்கறவங்களுக்கு மீனாட்டசிதான் அவ மேலதான் அக்கறை காட்டுவாங்க , நாமயெல்லாம் அப்படியா  நம்ம கஷ்டத்தையும் கண்ணீரையும் கேட்கறதுக்கு யார் இருக்காங்க என முத்தழகு கேட்க என்ன முத்து அப்படி பேசற இங்க யாரும் அப்படி நினைக்கல எல்லாருக்கும் எல்லார் மேலயும் அக்கற இருக்கு என்கிறாள் சத்யா
அப்போது அங்கே வரும் தெய்வானை மீனாட்சியை நலம் விஷாரித்துவிட்டு, உனக்கு சீக்கிரம் குணமாகனும்னு  அந்த கடம்பாவனத்தம்மன வேண்டிட்டு வந்தேன்
எங்க எல்லாரோட வேண்டுதலும் வீண் போகல அந்த ஆத்தா உன்ன நல்லபடியா கண்முழிக்க வச்சிட்டா இனிமே உனக்கு எந்த பிரச்சனையும் இல்ல நீ நூறு வயசுவரைக்கும் நல்லா இருப்ப என திருநீர் வைத்துவிடுகறார் தெய்வானை, உங்க எல்லோரோட அன்பும் பிரார்த்தனையும் என்கூட இருக்கும்போது எனக்கெதுவும ஆகாது என்கிறாள் மீனாட்சி

அப்போது அங்கே நொண்டிக்கொண்டே வரும் சங்கரபாண்டி  தடுமாறி கீழே விழப்போக சரவணன் தன் அண்ணனை தாங்கிபிடிக்கப்போகும் போது முத்தழகு அவரை தள்ளிவிட்டு அவரை தொடரதுக்கு உனக்கு எந்த அருகதையும் என திட்டுகிறாள் முத்தழகு
அது ஏ அண்ணன ஏ அண்ணன தொடரதுக்கு எனக்கு எல்லா உரிமையும் இருக்குனு சரவணன் சொல்ல அப்படி உன் அண்ணன் மேல அக்கறை இருக்குற ஆழு தெரியாம செஞ்ச தப்புக்குத்தான் போலிஷ்ல கொண்டுபோய் புடிச்சி கொடுத்தயோ என பழனியம்மாள் கேட்க, அதைக்கேட்டு அதிர்ச்சியாகும் மீனாட்சி சரவணனிடம் கேட்க, உடனே முத்தழகு என்ன எதுவுமே தெரியாத மாதிரி கேட்கற எல்லாரும் திட்டம்போட்டுதான என் மாமாவ போலிஷ்ல மாட்டிவிட்டிங்க என முத்தழகு திட்ட, மீனாட்சி எனக்கு எதுவுமே தெரியாது என்கிறாள் உடனே முத்தழகு சங்கரபாண்டிக்கு போலிஷ் அடித்ததனால் ஏற்பட்ட காயத்தை காட்ட அதைப்பார்த்து மீனாட்சி அதிர்ச்சியாகிறாள்

தெரியாம என் மாமா உன்ன அடிச்சிட்டாருன்றதுக்காக ரெண்டு பேரும் சேர்ந்து அவரை பழிவாங்கிட்டிங்க இல்ல உன் தலையில அடிபட்ட காயம்கூட ஈஷியா போயிடும், என் மாமாபட்ட அவமானம் அசிங்கமும் போகுமா என கோபமாக கேட்கிறாள் முத்தழகு

மீனாட்சியை நடந்த விஷயத்தை கேட்டு தெரிந்து கொண்டு தன் அம்மாவிடம் ஏம்மா இப்படி பண்ண என சண்டை போட உடனே இலட்சுமி எனக்கும் இதுக்கும் சம்பந்தமில்ல, உன்னோட நிலைமைய பார்த்து தாங்க முடியாம அண்ணன் கம்ப்ளைன்ட் பண்ணியிருக்காரு
உன்ன உயிர் போற அளவுக்கு அடிச்சிருக்கான் அவனுக்கு இந்த தண்டனைகூட இல்லனா எப்படி சொல்லிவிட்டு உன்ன வெளியில விடாம உள்ளயே வைக்கனும்னு நினைச்சேன் ஆனா எப்படியோ வெளிய வந்துட்ட என சங்கரபாண்டியை திட்ட அதனால் கோபமாகும் வேலுச்சாமி போதும் நிறுத்து நானும் போனா போகுதுனு பார்த்தா உன் இஷ்டத்துக்கு பேசிட்டே போற என் பையன நீ நிரந்தரமா உள்ள வச்சிருவியா ஒரு நாள் உள்ள வச்சதுக்கே உன்னையும் உன் அண்ணனையும் சும்மா விட்டுருக்க மாட்டேன் போனா போதுன்னு என் மருமக முகத்துக்காகத்தான் சும்மா விட்டேன், உன்னாலதான் இந்த குடும்பம் ரெண்டு துண்டா உடைஞ்சி கிடக்கு என திட்ட,

உடனே இலட்சுமி என்னாலதான உங்க குடும்பத்துல பிரச்சனை இப்பவே நான் இந்த வீட்ட விட்டு போறேன் என மீனாட்சியை வா போலாம் என கூப்பிட மீனாட்சி தன் அம்மாவை அமைதியாக இருக்கச்சொல்ல என்ன அசிங்கப்படுத்துனத நீயும் பார்த்துட்டுதான இருந்த என்னால இதுக்குமேல பொறுமையா இருக்க முடியாது வா போகலாம் என மீனாட்சியை கூப்பிட கோபமாகும் வேலுச்சாமி இலட்சுமியோடயே சரவணனையும் மீனாட்சியையும் போகச்சொல்கிறார்,
இலட்சுமி வலுக்கட்டாயமாக மீனாட்சியை கூப்பிட மீனாட்சி போகமாட்டேன் என்கிறாள்
ஆனால் இலட்சுமி பிடிவாதமாக உள்ளே போய் லக்கேஜ் எல்லாம் எடுத்துட்டு வந்து உங்களுக்கு ஏ பொண்ணுதான் முக்கியம்னா என் கூட வாங்க இல்ல உங்க குடும்பம்தான் முக்கியம்னா அவங்க கூடவே இருங்க என சொல்ல உடனே கோபமாகும் வேலுச்சாமி இத்தனை நாளா உங்க அத்தைதான் முக்கியம்னு இருந்த இல்ல போ அவங்ககூடவே போ என்கிறார்

சரவணனும் மீனாட்சியும் வீட்ட விட்டு போகப்போறாங்க என சந்தோஷப்படுகிறார் பழனியம்மாள் ஆனால் சரவணன் அப்போதுதான் தன் நாடகத்தை அரங்கேற்றுகிறான் நான் வீட்ட விட்டு போயிடவேன்னு நீங்க முடிவு பண்ணிட்டிங்க இல்ல, எப்படி நீங்க அப்படி நினைச்சிங்க என வேலுச்சாமி தெய்வானை சத்யா ராஜி என எல்லோரிடமும் கேட்கிறான், இந்த வீட்ல இருக்கிற யார் வேணும்னாலும் அப்படி நினைக்கலாம் ஆனா ஏ அண்ண நீ அப்படி நினைக்கலாமா, சின்ன வயசுல நான் விரல் சூப்புர அப்ப என் விரலுக்கு எதுவும் ஆகக்கூடாதுன்னு உன் விரல கொடுத்தியே, மூணாவது படிக்கும்போது ஏ ட்ராயிங் மாஸ்டர் கட்டில் மெத்த படம் வரைய சொன்னப்பக்கூட நான் உன் தோளத்தான் வரைஞ்சேன் ஏன்னா உன் தோள்ல படுத்து தூங்கன எனக்கு அதுதான கட்டில் மெத்தை
நம்ம பெத்தவங்க உனக்கு பத்தாத சட்டையெல்லாம் எனக்கு போட்டுவிடறாங்கன்னு சொல்லி நீ புதுத்துணி எடுக்கும்போதே என் சைசுக்கு எடுத்து அப்புறம் அது உனக்கு பத்தலன்னு நம்ம பெத்தவங்கள ஏமாத்தி அந்த புதுத்துணியை எல்லாம் எனக்கே போட்டுவிடுவியே அப்படி பட்ட உன்னவிட்டு நான் போயிடுவனானே நான் மீனாட்சிய கல்யாணம் பண்ணி உன் வாழ்க்கை பறிபோனப்பக்கூட அந்த கஷ்டத்தையெல்லாம் மறந்துட்டு இந்த குடும்பத்துக்காக கிடைச்ச வாழ்க்கைய ஏத்துக்கிட்ட தங்க மகனாச்சே நீ அப்படி பண்ண உன்னவிட்டு நான் எப்படினா போவேன்

உனக்கும் எனக்கும் ஆயிரம் இருக்கும் அதுல நல்லதும் இருக்கும் கெட்டதும் இருக்கும் அத நாமதான் பேசி தீர்த்துக்கனும் அப்படி இல்லையா அடிச்சி சட்டையகிட்டைய கிழிச்சி மண்டையகிண்டைய உடைச்சி சமாதானம் ஆயிடனும் என்ன அடிக்கிற உரிமை உனக்கும் இருக்கு உன்ன அடிக்கிற உரிமை எனக்கும் இருக்கு இதுல யாரவது குறுக்க புகுந்து பஞ்சயத்து பண்ண வந்தா அவங்க மூஞ்சகீஞ்ச எல்லாம் அடிச்சி பஞ்சராக்கி விட்றனும்,

அப்படியும் நீ சமாதானம் ஆகல, உனக்கு கோபம் போகலன்னா இந்தா இந்த அருவாவாலே வெட்டிடு என அருவாவை எடுத்து வந்து தருகிறான் சரவணன் சங்கரபாண்டி அந்த அருவாவை கீழே போட்டுவிட்டு நீ ஏ உசுருடா ஏ உசுர போய் நான் எப்படிடா எடுப்பேன் என சங்கரபாண்டி அழ இருவரும் கட்டிப்பிடித்துக்கொண்டு அழுது ஒரு பாசமலர் நாடகத்தை போடுகிறார்கள் அவர்கள் ரெண்டு பேரையும் எல்லோரும்க ஆச்சர்யமாக பார்க்கிறார்கள்

பின் சங்கரபாண்டி மீனாட்சியிடம் போய் தான் அடித்தது தப்பு என்ன மன்னிச்சிடு என மன்னகப்பு கேட்கிறான் ஆனால் மீனாட்சி நீங்க எந்த தப்பும் பண்ணல உங்க மேல எனக்கு எந்த வருத்தமும் இல்ல நான் எதாவது உங்கள கஷ்டபடுத்தி இருந்தா என்ன மன்னிச்சிடுங்க என மன்னிப்பு கேட்க, நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்டா அது நியாயம் ஆனா ஒரு தப்பும் பண்ணாத நீ என்கிட்ட மன்னிப்பு கேட்க தேவையில்ல

சக்திவேல் அவர்கள் சமாதானம் ஆகிவிட்டதை பார்த்து சட்டுபுட்டுன்னு இந்த எதிரணி ஒன்னாயிடுச்சி அப்ப இந்த வில்லிகள் கூட்டணி என்னாகும் என மனதுக்குள் புலம்புகிறார்

சங்கரபாண்டி சரவணனை கூப்பிட்டு நான்தான் நீ, நீதான் நான் இனிமே நம்ம ரெண்டு பேரையும் எந்த எனர்ஜியாலயும் பிரிக்க முடியாது என இருவரும் கட்டிப்பிடித்து அழுகிறார்கள்

அடுத்து பழனியம்மாளும், முத்தழகும் காய் நறுக்கிட்டு இருக்க அப்போது அங்கே வரும் சரவணன் தான் குளிக்கறதுக்கு வச்சிருந்த துண்டை காணோம் பாத்திங்களா என அவர்களை கேட்டுவிட்டு போகிறான் அப்போது அங்கே வரும் சங்கரபாண்டி சரவணன் என்ன உங்கள ஏதோ பாத்திங்களா பாத்திங்களான்னு கேட்டுட்டு போறான் என கேட்க

பழனியம்மாள் அங்கே நடந்ததை மறைத்து சரவணனை பற்றி இல்லாததும் பொல்லாததும் சொல்கிறார்
இந்த வீட்ல நடந்த எல்லா பிரச்சனைகக்கும் நீங்கதான் காரணம்னு அவன்கிட்ட நீங்க மன்னிப்பு கேட்டிங்களலாம் அதை சொல்லி பீத்திட்டு போறான் இந்த விஷயத்தை எல்லோர்கிட்டேயும் சொல்றதுக்காகத்தான் வேகமா மேல போறான்
அன்னைக்கு அவங்க அத்தை கூப்பிட்ட அப்பவே வீட்ட விட்டு வெளிய போயிருப்பானாம் ஆனா இந்த வீடு முத்தழகு பேர்ல இருக்குன்ற ஒரே காரணத்துனால இந்த வீட அவன் பேர்ல மாத்திட்டு போகனும்னுதான் அவன் இங்க இருக்கானாம், நீங்கதான் பழச மறந்துட்டு அவன்கிட்ட அன்பா பழகனும்னு நினைக்கிறிங்க ஆன அவன் நீங்க அவனோட பொண்டாட்டிய அடிச்சதால உங்கள பழிவாங்கனும்ன்ற கோபத்துல இருக்கான் போலிஷ்ல இருந்து வேணும்னா உன் மருமகன் இப்ப தப்பிச்சி இருக்கலாம் ஆனா கூடிய சீக்கிரமே உங்கள நிரந்தரமா போலிஷ்ல புடிச்சி குடுக்காம விடமாட்டேன் என சவால்விட்டுட்டு போனான் என பழனியம்மாள் மேலும் மேலும் அடுக்கிக்கொண்டே போகிறார்
உடனே சங்கரபாண்டி போனாபோது நம்மளவிட ரெண்டு வயசு சின்னப்பையன்னு விட்டா என்னையவே அவன் பதம் பார்க்க பார்க்கறானா, என்ன அவன் நிரந்தரமாதான உள்ளதள்ள ஆசைப்பட்டான், அவன ரெண்டு துண்டா வெட்டி போட்டுட்டு நான் ஜெயிலுக்கு போறேன் என மறுபடியும் ஒரு நாடகத்தை அரங்கேற்ற பொய்யான கோபத்துடன் சரவணனிடம் போகிறான்

சங்கரபாண்டி கோபமாக போவதாக நினைத்து முத்தழகு பதற, பழனியம்மாள் முத்தழகை அமைதியாக இருக்கச்சொல்லிவிட்டு அவங்க ரெண்டு பேரும் சட்டைய கிழிச்சிக்கிற மாதிரி அடிச்சிக்கிட்டும்,  இதுக்குதான ஆசைபப்பட்டோம், முதல்ல இந்த அண்ணன் தம்பி பாசத்த அறுத்துவிட்டாதான் மாப்பிள்ளை உன் வழிக்கு வருவாறு, நடக்குறது எல்லாம் நல்லதுக்குன்னு நினைச்சிக்கோ என சொல்ல முத்தழகு சரி என்கிறாள்

வா மேல என்ன நடக்குதுன்னு பார்க்கலாம் என இருவரும் ஆரவமாக சண்டையை பார்க்க கிளம்புவதோடு இப்பகுதி முடிகிறது

Comments

Popular posts from this blog

ஷிரிதேவியின் வாழ்க்கையை சீரழித்தவன் யார் தெரியுமா ?

இந்த தலைப்பை பார்த்தவுடன் ஆர்வமாக இந்த கட்டுரையை படிப்பீர்கள், ஆனால் இந்த கட்டுரையின் முடிவில் நடிகை ஷிரிதேவியின் வாழ்க்கையை சீரழித்தது யார் என்று உங்களுக்கு தெரிந்துவிடும் ஒரு காலத்தில் உச்சத்தில் இருந்த ஒரு நடிகை, எல்லோர் மனதிலும் நீங்காத இடம்பிடித்த ஒரு நடிகை ஷிரிதேவி, அவர் மாரடைப்பால் மரணித்துவிட்டார் என்ற செய்தியை கேள்விபட்ட எல்லோருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது மாரடைப்பால் மரணம் என்று முதலில் செய்தி வந்தாலும் வந்தது, அவர் உதடு மற்றும் மார்பக மாற்றத்திற்கு செய்துகொண்ட அறுவை சிகிச்சையினால்தான் அவருக்கு மாரடைப்பு வந்தது என கதைகட்ட ஆரம்பித்தார்கள், சிலர் அதைவிட ஒரு படி மேலே போய் ஷிரிதேவி மரணத்தில் மர்மம் அவர் விஷம் கொடுத்து கொள்ளப்பட்டார்  என மேலும் கதைகட்ட ஆரம்பித்தார்கள் ஆனால் இந்த செய்திகளையெல்லாம் பொய்யாக்கும் விதமாக சமிபத்தில் வெளியான செய்தி ஷிரிதேவி மரணத்தில் உள்ள மர்மத்தை விலக்கியுள்ளது ஆனால் அதே செய்தி ஷிரிதேவியின் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது அவரது மரணத்திற்கு பின் வெளியான போஷ்ர்மார்டம் ரிப்போர்டில் அவரது மரணம் எதிர்பாராத விபத்தினால் ஏற்பட்டத...

Saravanan Meenatchi 26/02/2018 || Episode - 1641

சரவணன் மீனாட்சி பகுதி - 1641                                             மருத்துவமனையில் நினைவில்லாமல் இருக்கும்  மீனாட்சியிடம் கண் முழிச்சி என்ன பாரு என அழுகிறான் சரவணன் என் வாழ்க்கைய அர்த்தமுள்ளதா மாத்தினது நீ எனக்கு அந்த கடவுள் கொடுத்த வரம் நீ, எனக்கு சந்தோஷத்த மட்டுமே அள்ளி கொடுத்த தேவதை, எனக்கு கிடைச்ச பொக்கிஷம் நீ, எந்த எதிர்பார்ப்பும் இல்லாம எனக்காக நீ எவ்வளவோ பண்ணியிருக்க, அதுக்கெல்லாம் பதிலுக்கு நான் என்ன பண்ண போறேன்னே தெரியல, நான் என்ன பண்ணாலும் நீ செஞ்சதுக்கு ஈடாகாது, உன்ன எப்படி எப்படியோ பார்த்துக்கனும்னு என் மனசுல ஆசை வச்சிருக்கேன் மீனாட்சி அது எல்லாத்தையும் உனக்காக பண்ணனும் உன்ன அப்படியே உள்ளங்கையிலேயே வச்சி தங்கமா தாங்கனும், ஊர்ல இருக்கிற எல்லா கணவன் மனைவியும் பார்த்து ஆச்சர்யப்படற அளவுக்கு நாம வாழனும், நீ ஆசைப்பட்ட அளவுக்கு நிறைய குழந்தைகள பெத்துக்கனும், நாம ரெண்டு பேர் மட்டும் மறுபடியும் ஹனிமூன் போகனும் என்ன விட்டு போயிட மாட்டியே வா மீனாட்சி எழுந்து...

Saravanan Meenatchi Serial 01/03/2018 || Episode - 1644

சரவணன் மீனாட்சி பகுதி - 1644 சரவணன் மீனாட்சியில் இன்று சங்கரபாண்டி மீனாட்சியிடம் மன்னிப்பு கேட்பதற்காக போக, மீனாட்சி அறையில் இருந்து வெளியே வரும் இலட்சுமி சங்கரபாண்டியை மீனாட்சியை பார்க்கவிடாமல் தடுத்து அவ இருக்காளா செத்துட்டாளானு பார்க்க வந்தியா என கேட்க, தவறுதல நடந்த விஷயத்துக்கு மன்னிப்பு கேட்கதான் வந்தேன் நான் இப்ப மீனாட்சிய பார்க்க முடியுமா முடியாதா சங்கரபாண்டி கேட்க, என் பொண்ண வேனும்னா நீ தெரியாம அடிச்சிருக்கலாம் ஆனா நீ என் மாப்பிள்ளைய தெரிஞ்சேதான் அடிச்ச ஒரு போட்டியில தோத்தத சாதாரண எடுத்தக்காம கோவத்துல என் மாப்பிள்ளைய அடிக்கப்போனியே இது எவ்வளவு பெரிய கோழைத்தனம் தெரியுமா என இலட்சுமி கேட்க, எங்க குடும்பம் சந்தோஷமா இருக்கக்கூடாதுன்றதுதான உங்க எண்ணம் நீங்க காலடி எடுத்துவச்ச நாள்ல இருந்து அடுக்கடுக்கான பிரச்சனையும் மனஸ்தாபமும் வந்ததுதான் மிச்சம் என சொல்ல நான் அதுக்காக ஒன்னும் வரல என் பொண்ணுக்காகத்தான் வந்தேன் ஆனா நான் வந்த நேரம் நீங்க உங்களுக்குள்ளே அடிச்சிக்கிட்டா நான் என்ன பண்ணுவேன் என இலட்சுமி கேட்க, நீங்க யாரு எப்படிபட்ட ஆளுன்னு எங்களுக்கு எல்லாம் தெரியும்,இதெல்லாம் தெரிஞ்ச...