சரவணன் மீனாட்சி பகுதி - 1641
மருத்துவமனையில் நினைவில்லாமல் இருக்கும் மீனாட்சியிடம் கண் முழிச்சி என்ன பாரு என அழுகிறான் சரவணன் என் வாழ்க்கைய அர்த்தமுள்ளதா மாத்தினது நீ எனக்கு அந்த கடவுள் கொடுத்த வரம் நீ, எனக்கு சந்தோஷத்த மட்டுமே அள்ளி கொடுத்த தேவதை, எனக்கு கிடைச்ச பொக்கிஷம் நீ, எந்த எதிர்பார்ப்பும் இல்லாம எனக்காக நீ எவ்வளவோ பண்ணியிருக்க, அதுக்கெல்லாம் பதிலுக்கு நான் என்ன பண்ண போறேன்னே தெரியல, நான் என்ன பண்ணாலும் நீ செஞ்சதுக்கு ஈடாகாது, உன்ன எப்படி எப்படியோ பார்த்துக்கனும்னு என் மனசுல ஆசை வச்சிருக்கேன் மீனாட்சி அது எல்லாத்தையும் உனக்காக பண்ணனும் உன்ன அப்படியே உள்ளங்கையிலேயே வச்சி தங்கமா தாங்கனும், ஊர்ல இருக்கிற எல்லா கணவன் மனைவியும் பார்த்து ஆச்சர்யப்படற அளவுக்கு நாம வாழனும், நீ ஆசைப்பட்ட அளவுக்கு நிறைய குழந்தைகள பெத்துக்கனும், நாம ரெண்டு பேர் மட்டும் மறுபடியும் ஹனிமூன் போகனும் என்ன விட்டு போயிட மாட்டியே வா மீனாட்சி எழுந்து வா மீனாட்சி நான் உன்ன இருக்கமா கட்டிபிடிச்சிப்பேன் என்னவிட்டு எங்கேயும் போகவிடமாட்டேன் என் உயிர கொடுத்தாவது உன்ன காப்பாத்துவேன் உனக்கு எதாவது ஆச்சின்னா நான் உயிரோடவே இருக்க மாட்டேன் என மீனாட்சி கையை பிடித்துக்கொண்டு அழுகிறான் சரவணன்
சரவணன் அதற்குமேல் மீனாட்சியை பார்க்க முடியாமல் அழுதுகொண்டே அங்கிருந்து போய்விடுகிறான், வெளியே இருக்கும் இலட்சுமியும், முத்தையாவும் மீனாட்சி கண்முழிச்சாலா எதாவது பேசினாலா எனக்கேட்க சரவணன் எதுவும் பேச முடியாமல் அழுது கொண்டே அங்கிருந்து போய்விடுகிறான்
ரிசப்சனில் இருக்கும் தனது குடும்பத்தை பார்க்கும் சரவணன் நீங்க இன்னும் வீட்டுக்கு போகலையா என சரவணன் கேட்க, மீனாட்சி இப்படி இருக்கும் நாங்க எப்படி வீட்டுக்கு போவோம், மீனாட்சி எப்படி இருக்கா டாக்டர் என்ன சொன்னாங்க என சரவணனை அவர்கள் கேட்க தலையில அடிபட்டதால மூளையில இரத்தம் உறைஞ்சிருக்கு, மீனாட்சிக்கு நினைவு திரும்புனாத ட்ரிட்மென்ட்டே பண்ண முடியுமாம், அதுவரைக்கும் எதுவுமே சொல்ல முடியாதுன்னு டாக்டர் சொல்லிட்டாங்க என சரவணன் அழுகிறான்,
வேலுச்சாமி மீனாட்சிக்கு எதுவும் ஆகாது அந்த கடம்பாவனத்தம்மன் மீனாட்சிய கைவிடமாட்டாறு என்கிறார்
சரவணன் இலட்சுமி கோபமாக பேசியதற்காக அவர்களிடம் மன்னிப்பு கேட்கிறான் பிறகு எல்லோரையும் வீட்டுக்கு போகச்சொல்ல மீனாட்சி இப்படி இருக்கும் போது நாங்க எப்படி வீட்டுக்கு போவோம் எங்ளாலதான் மீனாட்சிக்கு இப்படி ஒரு நிலைமை அதுக்கு பிராய்சித்தம் மீனாட்சி கண் முழிச்சி அவகிட்ட மன்னிப்பு கேட்கறதுதான் என்கிறார் அவளுக்கு ஒன்னும் ஆகாது நீ அழாத என சரவணனை சமாதானப்படுத்தி அனுப்புகிறார் வேலுச்சாமி
மறுபடியும் மீனாட்சியின் அறைக்கு போகும் சரவணன் மீனாட்சியின் பக்கத்தில் உட்கார்ந்து பேசுகிறான் நீ கண் முழிச்ச உடனே என்னதான் பார்க்கனும் உன்ன விட்டு எங்கியும் போக மாட்டேன், என் உயிர கொடுத்தாவது உன்ன காப்பாத்துவேன்
நான் உன் மேல வச்சிருக்கிற காதல் உண்மைனா பாசம் உண்மைனா நீ இன்னைக்கு, இப்பவே கண் முழிப்ப மீனாட்சி என அங்கேயே உட்கார்ந்து தன்னோட தூக்கத்தையும் கண்ட்ரோல் பண்ணி மீனாட்சிய பார்த்துட்டே இருக்க மீனாட்சி மெதுவா கண்முழிச்சி சரவணனை பார்க்க சரவணன் சந்தோஷப்படுகிறான்
சந்தோஷத்தில் மீனாட்சிக்கு முத்தம் கொடுக்கிறான், நீ ஆசைப்பட்ட மாதிரி நான் கண் முழிச்ச உடனே உன்னதான் பார்த்தேன் என மீனாட்சி சொல்ல, நான் பேசும்போது நீ மயக்கத்துல தான இருந்த என சரவணன் கேட்க, நீ என் கைய பிடிச்சி மீனாட்சின்னு பேசும்போதே எனக்கு நினைவு திரும்பிடிச்சி நீ காதலோட உருகி உருகி என் கைய பிடிச்சி பேசிட்டு இருக்கும்போது நான் பட்டுன்னு கண்முழிச்சி அந்த பீலிங்க தடுக்க விரும்பள நீ மனசார பேசின ஒவ்வொரு வார்த்தையையும் நான் உருகி உருகி ரசிச்சிட்டு இருந்தேன் இதுக்கு மேல உன்ன பார்க்காம இருக்க முடியாதுன்னுதான் உன் முகத்த கண் முழிச்சி பார்த்தேன் என்கிறாள் மீனாட்சி
நீ எதுக்கு என் மேல விழ இருந்த அடிய வாங்கிட்ட என சரவணன் கேட்க உனக்கு எதுவும் ஆகக்கூடாதுன்றதுக்காத்தான் அந்த அடிய நான் வாங்கிட்டேன் என்கிறாள் மீனாட்சி
அந்த அடி எம்மேல விழுந்திருந்தாக்கூட எனக்கு இப்படி வலிச்சிருக்காது, உனக்கு அடிபட்ட உடனே நான் துடிச்சி போயிட்டேன், நான் உங்கூட நூறு வருசம் வாழனும் வருஷத்துக்கு ஒவ்வொரு குழந்தைய நாம பெத்துக்கனும் என சரவணன் சொல்ல, நீ ஒவ்வொரு தடவையும்குழந்தைகளோட லிஷ்ட நீட்டிட்டே போற, என்ன ஹாஸ்பிட்டல்ல இருந்து டிஷ்சார்ஜ் பண்ணி கூட்டிட்டு போறேன்னு சொல்லிட்டு உனக்கு வருஷா வருஷம் குழந்தை பெத்து தர்றதுக்காகவே என்ன ஹாஸ்பிட்டல்லயே தங்க வச்சிருவ போல என மீனாட்சி கேட்க
தங்கிற வேண்டியதுதான எனக்கு எக்ஸ்ட்ரா பெட் கூட தேவையில்ல இதே பெட் போதும் என சரவணன் சொல்ல அப்படியே கொஞ்சம் நேரம் ரொமான்ஸ் நீள்கிறது
உன்கூட பேசிட்டே நீ கண்முழிச்ச விஷய்த்த சொல்ல மறந்துட்டேன் என சரவணன் சொல்ல மீனாட்சி சங்ககரபாண்டியை பற்றி விஷாரிக்கிறாள், சங்கரபாண்டியை தன் அம்மா திட்டியது தெரிந்து மீனாட்சி வருத்தப்படுகிறாள்
சரவணன் மீனாட்சி கண் முழித்த விஷய்த்தை இலட்சுமி முத்தையாவிடம் சொன்னவுடன் அவர்கள் சந்தோஷமாக மீனாட்சியை பார்க்க போகிறார்கள், அடுத்து சரவணன் தன் அப்பா அம்மாவிடம் மீனாட்சி கண் முழித்த விஷயத்தை சொல்ல அவர்களும் மீனாட்சியை பார்ப்பதற்காக போகிறார்கள்
உள்ளே இலட்சுமியும் முத்தையாவும் இருப்பதால் நீ முதல்ல உள்ள போப்பா நாங்க அவங்க வெளிய வந்த உடனே போய் பார்த்துக்கிறோம் என சொல்கிறார் வேலுச்சாமி
உள்ளே இலட்சுமி உன் மேல எவ்வளவு ஆத்திரம் இருந்திருந்தா அந்த சங்கரபாண்டி உன்ன அடிச்சிருப்பான் என சொல்ல, அவர் வேணும்னே என்ன அடிக்கல நான் தான் குறுக்க போயிட்டேன் என சொல்ல அப்ப அந்த அடி சரவணன் மேல பட்டிருந்தா மட்டும் பரவாயில்லையா என முத்தையா கேட்கிறார்
அப்போது அங்கே வரும் சரவணன் நபந்த ஒரு சின்ன விஷயத்தை வச்சி எங்க குடும்பத்த தப்பா நினைக்காதிங்க என்கிறான் சரவணன்
அவங்க எல்லாம் நீங்க நினைக்கிற மாதிரி நல்லவங்க கிடையாது அது மாப்பிள்ளைக்கும் தெரியல , ஒரு நாள் உஙகளுக்கு அவங்களோட சுயரூபம் தெரியதான் போகுது, அப்பதான் நான் சொல்றது எல்லாம் உண்மைனு உங்களுக்கு புரியவரும் என்கிறார் இலட்சுமி
உங்க அண்ணன் உங்கள அடிச்சி கொல்ல பார்த்ததும் , உங்களுக்காக என் பொண்ணு அடிபட்டு கிடக்கறதும் எந்த விதத்திலேயும் தப்பே இல்லை என இலட்சுமி பேசிக்கொண்டே போக
மீனாட்சி இதுக்கு மேல இதப்பத்தி யாரும் எதுவும் பேசாதிங்க என தடுத்துவிடுகிறாள் மீனாட்சி, அத்தை மாமாவ பார்க்கனும் என மீனாட்சி கேட்க நீ பண்றதுக்கு அளவே இல்லையா, இந்த மாதிரி நேரத்துல அவங்கள பார்க்க வேணாம் என இலட்சுமி சொல்ல மீனாட்சி பிடிவாதமாக அவங்கள பார்த்தே ஆக வேணடும் என்கிறாள்
அதற்கு இலட்சுமி நீ என்னமோ பண்ணு என திட்டிவிட்டு போக, சரவணன் எல்லோரையும் கூட்டி வருவதற்காக வெளியே போவதோடு இப்பகுதி முடிகிறது







Comments
Post a Comment