Skip to main content

Saravanan Meenatchi Serial 27/02/2018 || Episode - 1642

சரவணன் மீனாட்சி பகுதி - 1642

மீனாட்சியை பார்த்துவிட்டு வெளியே வரும் இலட்சுமி வேலுச்சாமி குடும்பத்தை பார்த்து நான்தான் உங்கள அப்பவே உங்கள போகச்சொன்னேன் இல்ல நீங்க இன்னும் போகலையா என திட்ட,


அவர்கள் மீனாட்சிய பார்க்காம நாங்க இங்க இருந்து போகமாட்டோம் என உறுதியாக சொல்கிறார்கள், கண் முழிச்ச அவள மறுபடியும் படுத்த படுக்கையாக்க பிளான் பண்றிங்களா என திட்டுகிறார் இலட்சுமி
கோபமாகும் வேலுச்சாமி நீ மீனாட்சி கண் முழிக்கனும்னு எவ்வளவு அக்கறையா இருந்தியோ அதைவிட அதிகமான அக்கறையோட நாங்க இருந்தோம், மீனாட்சிய ஒரு தடவ பார்த்துட்டு நாங்க போயிடறோம் புரிஞ்சிக்கோ என்கிறார்
தாத்தாவும், ராஜியும் இலட்சுமிக்கு எடுத்துச்சொல்கிறார்கள்
சரவணனும் பிரச்சனையெல்லாம் வேணாம் இவங்கள பார்த்தா மீனாட்சி சந்தோஷப்படும் என இலட்சுமியிடம் கெஞ்ச
எல்லோரும் மீனாட்சிய பார்த்துட்டு அஞ்சு நிமிசத்துல வெளிய வந்துடனும், யாரும் அழுது அவள டிஷ்டர்ப் பண்ணக்கூடாது என சொல்லி அனுப்புகிறார்


எல்லோரும் உள்ளே போகிறார்கள், ஏ பிள்ளைய காப்பத்துறேன்னு நீ அடி வாங்கிட்டியே நீயும் என் பிள்ளைதான்றத மறந்துட்டியா, சரவணனுக்கு எதாவது ஒன்னுதான்னா நாங்க கஷ்டம்தான் படுவோம் ஆனா உனக்கு ஒன்னுனா நாங்க துடிச்சி போயிடுவோம் என அழுகிறார் தெய்வானை

வேலுச்சாமியும் நீ ஏ வம்சத்த காப்பாத்த வந்த ஆத்தான்னு நான் வாயாலதான் சொன்னேன் நீ அதை நிஜமாக்க பாத்தியா
என் ஆத்தா செத்தப்பக்கூட நான் இப்படி அழல ஆனா உனக்கு அடிபட்டு விழுந்த அந்த நொடியில் ஆரம்பிச்ச அழுக இப்பவரைக்கும் என் கண்ணுல தன்னியா வந்துட்டு இருக்கு என அழுகிறார்

என் பேரனுக்கு மனைவியா எனக்கு பேத்திய மட்டும் இந்த வீட்டுக்கு வரல, இந்த குடும்பத்த காப்பாத்த வந்த ஆத்தாமா நீ
நீ பெத்துக்கொடுக்கிற கொல்லு பேரன கொஞ்சாம கண்ண மூடக்கூடாதுன்னு உயிர கையில பிடிச்சிட்டு இருக்கேன்
நீ சரவணன் ஆசைப்பட்ட மாதிரி 10, 15 கொல்லுப்பேரங்கள பெத்து கொடுக்கனும், அதே மாதிரி நீயும் உன் கொல்லு பேர பேத்திங்கள கொஞ்சனும் என்கிறார்

ராஜியும், சத்யாவும் கூட உனக்கெதாவது ஆச்சின்னா எங்களால தாங்க முடியாது என்கிறார்கள்

சக்திவேலும் நான் இவங்க அளவுக்கெல்லாம் நான் உங்க மேல பாசம் வச்சிருக்கேனானு தெரியலை, எம்மேல உங்களுக்கு தனிப்பாசம் இருக்குன்னு எனக்கு தெரியும், தெரிஞ்சோ தெரியாமலையோ நான் உங்களுக்கு நிறைய கெடுதல் பண்ணியிருக்கேன், ஆனா நீங்க எனக்கு நல்லது மட்டுமேதான் பண்ணியிருக்கிங்க, நான் உங்கள சாதாரணமாதான் சிஸ்டர்னு கூப்பிட்டேன் ஆனா நீங்க அண்ணான்னு கூப்பிட்டதுல உண்மையான அன்பு இருந்துச்சி அது இத்தனை நாளா எனக்கு புரியாம போச்சி நீங்க அடிபட்டு விழுந்தப்பத்தான் எனக்கே புரிஞ்சது, உங்க நல்ல மனசுக்கு நீங்க நல்லா இருப்பிங்க என கண்கலங்குகிறார்

பழனியம்மாள் மீனாட்சியிடம் ஒரு நடிப்பை போடுகிறார் உனக்கு அடிபட்ட உடனே நான் பதறிப்போயிட்டேன நீ கண் முழிச்சப்பதான் எனக்கு உயிரே வந்துச்சி என பில்டப் கொடுக்கிறார்


எல்லோரும் உன் மேல எவ்வளவு பாசம் வச்சிருக்காங்க இதைவிட உனக்கு என்ன வேணும் என சரவணன் கேட்க, இந்த குடும்பத்துல ஒருத்தியா நான் ஆயுக்கும் வாழ்ந்தா போதும் என்கிறாள் மீனாட்சி

தெய்வானை மீனாட்சியிடம் சங்ரபாண்டி ஆத்திரத்துல புத்திகெட்டுபோய் இப்படி பண்ணிட்டான் அவன நீ மன்னிச்சிட்டு என சொல்ல

சங்கரபாண்டி மாமா மேல எனக்கு எந்த கோபமும் இல்ல நாங்க நடந்துகிட்டவிதம்தான் ஏதோ ஒருவகையில அவர கோபப்படுத்தியிருக்கு அதுக்காக நாங்கதான் அவர்கிட்ட மன்னிப்பு கேட்கனும் என்கிறாள் மீனாட்சி

வயசுலதான் நாங்க பெரியவங்க ஆனா மனசலவுல நீதான் பெரியவ,நீ தங்கமான பொண்ணு உன் நல்ல மனசுக்கு எந்த குறையும் வராம நீ நல்லா வருவ என்கிறார் வேலுச்சாமி

எல்லோரும் வீட்டிற்கு போக அங்கே இருக்கும் முத்தழகு மீனாட்சியை பற்றி விசாரிக்க, ஏதோ இருக்காம்மா மீனாட்சிக்கு தலையில பலமா அடிபட்டு இருக்கிறதால இப்பதான் கண் முழிச்சா என எல்லோரும் சொல்ல, நீங்க அங்கியே இருந்து மீனாட்சிய பார்த்துக்க வேண்டியதுதான என முத்தழகு சொல்ல அந்த இலட்சுமி அங்க இருக்கக்கூடாதுனு எங்கள அடிச்சி துறத்திட்டா என பழனியம்மாளும், சக்திவேலும் சொல்கிறாள்
ஆனால் ராஜி டாக்டர்தான் ஹாஸ்பிட்டல்ல கூட்டமா இருக்கக்கூடாதுனு சொன்னாரு அதனாலதான் வந்துட்டோம் என்கிறாள்

வேலுச்சாமி எல்லோரிமும் நடந்த சம்பவம் எதேச்சையா நடந்தது, அதனால இதைவச்சி யாரும் யாரையும் குறை சொல்லவும் கூடாது, குத்திக்காட்டவும் கூடாது என்கிறாள்

சங்கரபாண்டி மாமா மீனாட்சிய பார்க்க ஹாஸ்பிட்டலுக்கு தான் வந்தாரு உங்ககூட அவர் வரலையா என கேட்க,  சங்கரபாண்டி ஹாஸ்பிட்டலுக்கே வரவில்லை என சொல்ல, மாமா நைட் கிளம்பும்போதே அழுது புலம்பிட்டே இருந்துச்சி, மீனாட்சிய பார்க்க மாமா போகலன்னா வேற எங்கதான் போயிருப்பாரு என முத்தழகு புலம்ப


 அப்போது அங்கே வரும் ஒருவர் சங்கரபாண்டி போலிஷ் ஸ்டேஷன்ல இருக்கும் விஷயத்தை சொல்ல எல்லோரும் பதறிப்போய் விடுகிறார்கள், என்ன ஏதுன்னு தெரியாம எல்லோரும் பதறாதிங்க நான் போய் என்ன ஏதுன்னு பார்த்துட்டு வந்துடறேன் என அங்கிருந்து சக்திவேலுடன் கிளம்புகிறார் வேலுச்சாமி

போலிஷ் ஸ்டேஷனில் ஏற்கெனவே சங்கரபாண்டியை அடித்து துன்புறுத்திய சப் இன்ஷ்பெக்டர் எதுக்காக அந்த பொண்ண அடிச்ச அந்த பொண்ணு மேல உனக்கு என்ன விரோதம் என மிரட்டிக்கொணடிருக்கிறார்,


அந்த பொண்ணோட உறவுக்காரக்காரங்க உன்ன நல்லா அடிச்சி விசாரிக்கச்சொன்னாங்க
சொல்லு உனக்கும் அந்தப்பொண்ணுக்கும் என்ன பிரச்சனை என மிரட்டிக்கொண்டிருக்க, அப்படியெல்லாம் எதுவுமில்லா சிலம்ப போட்டியில தெரியாம கம்பு பட்டுறிச்சி சும்மா உங்க இஷ்டத்துக்கு பேசாதிங்க என்கிறான் சங்கரபாண்டி
அப்போது அங்கேவரும் வேலுச்சாமி சங்கரபாண்டியை போலிஷ் அடித்திருப்பதை பார்த்து பதறுகிறார், எதுக்காக என் பையன இப்படி அடிச்சிருக்கிங்க என வேலுச்சாமி கேட்க,

அந்த பொண்ணு மண்டைய அடிச்சி உடைச்சா சும்மா விடுவாங்களா அந்த பொண்ணோட சொந்தக்காரக்காரங்க கம்ப்ளைன்ட் பண்ணியிருக்காங்க, கம்ப்ளைன்ட் பண்ணும்போதே அடிச்சி தோல உறிக்கச்சொல்லியிருக்காங்க

வேலுச்சாமி எதெச்சையா எதிர்பாராம நடந்த விஷயம் என் மருமக நல்லா இருக்கா, தயவுசெஞ்சி என் புள்ளைய விட்டுடுங்க என வேலுச்சாமி கெஞ்ச, அந்த பொண்ணு குணமானாலும் அவங்க கொடுத்த கேஸ் ஸ்ட்ராங்கா இருக்கு விடமுடியாது என பிடிவாதமாக சப் இன்ஷ்பெக்டர் சொல்கிறார்


அப்போது அங்கே வரும வேலுச்சாமிக்கு தெரிந்த இன்ஷ்பெக்டர் நடந்ததை கேள்விபட்டு சப் இன்ஷ்பெக்டரை திட்டுகிறார், யார்கிட்டயாவது கை நீட்டி பணத்த வாங்கிட வேண்டியது அப்புறம் யாரையாவது போட்டு அடிக்க வேண்டியது, முதல்ல அவங்க கொடுத்த கம்ப்ளைன்ட கிழிச்சி போட்டுட்டு இவர வெளியவிடு என இன்ஷ்பெக்டர் சொல்கிறார்

அவருக்கு நன்றி சொல்லிவிட்டு வேலுச்சாமியும், சக்திவேலும் சங்கரபாண்டியை கூட்டிப்போகிறார்கள்

வீட்டில் பழனியம்மாள் இதற்கெல்லாம் காரணம் அந்த இலட்சுமிதான் அவ பொண்ண அடிச்சதுக்கு பழி வாங்கறதுக்காக சங்கரபாண்டி மேல கேஸ் கொடுத்திருக்காங்க என திட்டுகிறார்


நாம அவ்வளவு சொல்லியும் கேட்காம அவ சங்கரபாண்டி மேல கேஸ் கொடுத்திருக்க, அவ நம்ம வீட்ல காலடி எடுத்த வச்சதுல இருந்துதான் இவ்வளவு பிரச்சனையும் என்கிறார் தெய்வானை
சங்கரபாண்டி மாமாவுக்கு மட்டும் எதாவது ஆச்சின்னா நான் உயிரோடவே இருக்க மாட்டேன் என முத்தழகு அழும்போது சங்கரபாண்டியை வேலுச்சாமியும், சக்திவேலும் வீட்டிற்குள் கூட்டிவர,


சங்கரபாண்டி வரும் நிலையை பார்த்து பதறிப்போய் சங்கரபாண்டியை எல்லோரும் கூட்டி வருவதோடு இப்பகுதி முடிகிறது

Image Courtesy : Star Vijay, Star Network

Comments

Popular posts from this blog

ஷிரிதேவியின் வாழ்க்கையை சீரழித்தவன் யார் தெரியுமா ?

இந்த தலைப்பை பார்த்தவுடன் ஆர்வமாக இந்த கட்டுரையை படிப்பீர்கள், ஆனால் இந்த கட்டுரையின் முடிவில் நடிகை ஷிரிதேவியின் வாழ்க்கையை சீரழித்தது யார் என்று உங்களுக்கு தெரிந்துவிடும் ஒரு காலத்தில் உச்சத்தில் இருந்த ஒரு நடிகை, எல்லோர் மனதிலும் நீங்காத இடம்பிடித்த ஒரு நடிகை ஷிரிதேவி, அவர் மாரடைப்பால் மரணித்துவிட்டார் என்ற செய்தியை கேள்விபட்ட எல்லோருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது மாரடைப்பால் மரணம் என்று முதலில் செய்தி வந்தாலும் வந்தது, அவர் உதடு மற்றும் மார்பக மாற்றத்திற்கு செய்துகொண்ட அறுவை சிகிச்சையினால்தான் அவருக்கு மாரடைப்பு வந்தது என கதைகட்ட ஆரம்பித்தார்கள், சிலர் அதைவிட ஒரு படி மேலே போய் ஷிரிதேவி மரணத்தில் மர்மம் அவர் விஷம் கொடுத்து கொள்ளப்பட்டார்  என மேலும் கதைகட்ட ஆரம்பித்தார்கள் ஆனால் இந்த செய்திகளையெல்லாம் பொய்யாக்கும் விதமாக சமிபத்தில் வெளியான செய்தி ஷிரிதேவி மரணத்தில் உள்ள மர்மத்தை விலக்கியுள்ளது ஆனால் அதே செய்தி ஷிரிதேவியின் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது அவரது மரணத்திற்கு பின் வெளியான போஷ்ர்மார்டம் ரிப்போர்டில் அவரது மரணம் எதிர்பாராத விபத்தினால் ஏற்பட்டத...

Saravanan Meenatchi 26/02/2018 || Episode - 1641

சரவணன் மீனாட்சி பகுதி - 1641                                             மருத்துவமனையில் நினைவில்லாமல் இருக்கும்  மீனாட்சியிடம் கண் முழிச்சி என்ன பாரு என அழுகிறான் சரவணன் என் வாழ்க்கைய அர்த்தமுள்ளதா மாத்தினது நீ எனக்கு அந்த கடவுள் கொடுத்த வரம் நீ, எனக்கு சந்தோஷத்த மட்டுமே அள்ளி கொடுத்த தேவதை, எனக்கு கிடைச்ச பொக்கிஷம் நீ, எந்த எதிர்பார்ப்பும் இல்லாம எனக்காக நீ எவ்வளவோ பண்ணியிருக்க, அதுக்கெல்லாம் பதிலுக்கு நான் என்ன பண்ண போறேன்னே தெரியல, நான் என்ன பண்ணாலும் நீ செஞ்சதுக்கு ஈடாகாது, உன்ன எப்படி எப்படியோ பார்த்துக்கனும்னு என் மனசுல ஆசை வச்சிருக்கேன் மீனாட்சி அது எல்லாத்தையும் உனக்காக பண்ணனும் உன்ன அப்படியே உள்ளங்கையிலேயே வச்சி தங்கமா தாங்கனும், ஊர்ல இருக்கிற எல்லா கணவன் மனைவியும் பார்த்து ஆச்சர்யப்படற அளவுக்கு நாம வாழனும், நீ ஆசைப்பட்ட அளவுக்கு நிறைய குழந்தைகள பெத்துக்கனும், நாம ரெண்டு பேர் மட்டும் மறுபடியும் ஹனிமூன் போகனும் என்ன விட்டு போயிட மாட்டியே வா மீனாட்சி எழுந்து...

Saravanan Meenatchi Serial 01/03/2018 || Episode - 1644

சரவணன் மீனாட்சி பகுதி - 1644 சரவணன் மீனாட்சியில் இன்று சங்கரபாண்டி மீனாட்சியிடம் மன்னிப்பு கேட்பதற்காக போக, மீனாட்சி அறையில் இருந்து வெளியே வரும் இலட்சுமி சங்கரபாண்டியை மீனாட்சியை பார்க்கவிடாமல் தடுத்து அவ இருக்காளா செத்துட்டாளானு பார்க்க வந்தியா என கேட்க, தவறுதல நடந்த விஷயத்துக்கு மன்னிப்பு கேட்கதான் வந்தேன் நான் இப்ப மீனாட்சிய பார்க்க முடியுமா முடியாதா சங்கரபாண்டி கேட்க, என் பொண்ண வேனும்னா நீ தெரியாம அடிச்சிருக்கலாம் ஆனா நீ என் மாப்பிள்ளைய தெரிஞ்சேதான் அடிச்ச ஒரு போட்டியில தோத்தத சாதாரண எடுத்தக்காம கோவத்துல என் மாப்பிள்ளைய அடிக்கப்போனியே இது எவ்வளவு பெரிய கோழைத்தனம் தெரியுமா என இலட்சுமி கேட்க, எங்க குடும்பம் சந்தோஷமா இருக்கக்கூடாதுன்றதுதான உங்க எண்ணம் நீங்க காலடி எடுத்துவச்ச நாள்ல இருந்து அடுக்கடுக்கான பிரச்சனையும் மனஸ்தாபமும் வந்ததுதான் மிச்சம் என சொல்ல நான் அதுக்காக ஒன்னும் வரல என் பொண்ணுக்காகத்தான் வந்தேன் ஆனா நான் வந்த நேரம் நீங்க உங்களுக்குள்ளே அடிச்சிக்கிட்டா நான் என்ன பண்ணுவேன் என இலட்சுமி கேட்க, நீங்க யாரு எப்படிபட்ட ஆளுன்னு எங்களுக்கு எல்லாம் தெரியும்,இதெல்லாம் தெரிஞ்ச...